ஆரஞ்சு எச்சரிக்கை
ஆரஞ்சு எச்சரிக்கைகோப்புப்படம்

சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! 200 மிமீ வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி...
Published on

சென்னை, திருவள்ளூருக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

மேலும், வலுவிழந்த புயல் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருப்பதால், மழை தொடர்ந்து பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், சென்னை மற்றும் திருவள்ளூரில் 204 மி.மீ. வரை மழை பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படை, சென்னை மாநகராட்சி பணியாளர்களும் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் உள்ளனர்.

Summary

Orange alert for Chennai, Thiruvallur! Chance of rain up to 200 mm!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com