சென்னையில் மழை தொடர்ந்தால் என்னவாகும்? தயார் நிலையில் தேசிய பேரிடர் குழு!

சென்னையில் மழை தொடர்ந்தால் என்னவாகும் என்பது பற்றிய தகவல்கள்.
சென்னை மழை
சென்னை மழை
Updated on
2 min read

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் 6 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தேவைப்பட்டால் புணே மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுப்பட்ட பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் டிட்வா புயலால் வடகடலோர மாவட்டங்களில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அங்குள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரிடமும் தேசிய பேரிடர் மீட்பு படையி்ன் டிஐஜி ஹரி ஓம் காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி பேசியதாவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 25 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 22 குழுக்களும் புதுச்சேரியில் 3 குழுக்களும் உள்ளன.

அதில் சென்னையில் மட்டும் 6 குழுக்கள் தயாராக உள்ளது. குறிப்பாக மணலியில் 2 குழுக்கள் கிண்டியில் 1 குழு மற்றும் வடபழனியில் 2 குழுக்கள் மற்றும் எழும்பூரில் ஒரு 1 தேசிய பேரிடர் மீட்பு குழு என தயாராக உள்ளது எனவும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு தேவைப்பட்டால் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வர வைக்கப்படும் என தெரிவித்தார்.

தற்போது வரை வடகடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்புகள் இல்லை எனவும் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனவும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்று மீட்பு பணிகள் மேற்கொள்ளும் அளவிற்கு பாதிப்புகள் இல்லை எனக் கூறினார்.

சில இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தொடா்ந்து சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உள்ள இடங்களுக்கு சென்று அவர்கள் தயாராக உள்ளார்களா என ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

டிட்வா புயல் நேற்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு தேவைப்படும் பட்சத்தில் புனே மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வர வைக்கப்படும் என தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுக்களில் பத்து குழுக்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான் என தெரிவித்தார்.

Summary

Information about what will happen if the rain continues in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com