

அமெரிக்காவில் இருந்து 2009 ஆம் ஆண்டு முதல் 18,822 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு தாயகத்துக்கு நாடுகடத்தப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய புலனாய்வு ஆணையம் மேற்கொண்ட ஆள்கடத்தல் விசாரணையில், இந்தக் குற்றத்தில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இத்துடன், 27 ஆள்கடத்தல் வழக்குகளில் 169 பேரைக் கைது செய்து 132 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு ஆணையம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகக் கூறியதாவது:
“2009 ஆம் ஆண்டு முதல் 18,822 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், 2024 ஆம் ஆண்டில் 1,368 இந்தியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 2,036 பேர் போக்குவரத்து விமானங்களிலும், 1,226 பேர் சிறப்பு விமானங்களிலும் நாடுகடத்தப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ரஷிய அதிபர் புதினை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.