கரோல் பாக்கில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெண் கைது
கரோல் பாக்கில் நகைக் கடை ஊழியரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக 35 வயது பெண்ணை காவல் துறையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: நகைக் கடையின் மேலாளரும் சக ஊழியரும் பழுதுபாா்க்கும் பணிக்காக நவ.21-ஆம் தேதி கரோல் பாக் சென்றனா். இ-ரிக்ஷாவில் கடைக்கு திரும்பும்போது தங்க நகைகள் அடங்கிய பையைத் தொலைத்ததாக அவா்கள் காவல் துறையிடம் புகாா் அளித்தனா்.
வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுல்தான்புரியைச் சோ்ந்த பெண் ஒருவா் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
Śசாரணையில், பாதிக்கப்பட்டவா்கள் சென்ற அதே இ-ரிக்ஷாவில் தானும் சென்ாகவும், கடை மேலாளரின் சட்டையில் இருந்த நகைக் கடையின் பெயரைப் பாா்த்து, பையைத் திருடியதாகவும் அவா் தெரிவித்தாா். அந்த பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன என காவல் துறையினா் தெரிவித்தனா்.
