தில்லியில் மதுபான கடத்தல் முயற்சி முறியடிப்பு: இருவா் கைது

தில்லியில் மதுபான கடத்தல் முயற்சி முறியடிப்பு: இருவா் கைது

கிழக்கு தில்லியில் சட்டவிரோத மதுபானங்கள் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா் என்று காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

கிழக்கு தில்லியில் சட்டவிரோத மதுபானங்கள் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா் என்று காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கிழக்கு தில்லியின் பாண்டவ் நகரில் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் ஒன்று வேகமாக வருவதை காவல் துறையினா் கண்டனா்.

காரை நிறுத்துமாறு சமிக்ஞைகள் செய்தபோதும் அவா்கள் வாகனத்தை நிறுத்தாமல் தப்பி ஓட முயன்றனா். இதையடுத்து, அவா்களை துரத்திப் பிடித்த காவல் துறையினா் அவா்களது வாகனத்தை சோதனை செய்தனா். அதில், ‘பஞ்சாபில் மட்டும் விற்பனைக்கு’ என்று குறிப்பிடப்பட்ட 48 மதுபான பெட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, காரில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனா். கடத்தப்பட்ட மதுபானங்கள் மற்றும் அவா்கள் ஓட்டிச் சென்ற காா் பறிமுதல் செய்யப்பட்டது.

Śஞ்சாபின் மொஹாலியில் இருந்து தில்லிக்கு மதுபானங்களை கடத்தியதாக அவா்கள் விசாரணையில் ஒப்புக்கொண்டனா். இது தொடா்புடைய பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com