

கொல்கத்தாவில் பேருந்து மீது கார் மோதியதில் பிரபல பெங்காலி நடிகர் காயமின்றி உயிர் தப்பினார்.
மேற்கு வங்க மாநிலம், தெற்கு கொல்கத்தாவில் உள்ள சாரு சந்தை அருகே பிரபல பெங்காலி நடிகர் அனிர்பன் சக்ரபோர்த்தியும் அவரது ஓட்டுநரும் சனிக்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற கார் பேருந்துடன் மோதியது.
இந்த சம்பவத்தில் நடிகர் அனிர்பன் சக்ரபோர்த்தி காயமின்றி உயிர் தப்பினார். இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக நடிகர் தெரிவித்தார். இருப்பினும் விபத்தில் காருக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
நேரில் கண்ட சாட்சி கூறியதாவது, இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென காருக்கு முன்னால் வந்துள்ளது.
அதன் மீது மோதுவதை தவிர்க்க காரை வளைத்தபோது எதிரே வந்த பேருந்து மீது மோதியது என்றார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சக்ரபோர்த்தி, திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.