

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் கார் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சர்தல் மாதா கோயிலில் வழிபாடு செய்துவிட்டு குடும்பத்தினர் காரில் சனிக்கிழமை தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கிஷ்த்வார் நகரத்திலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள டிராப்ஷல்லா இணைப்புச் சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் விழுந்தது.
உடனே உள்ளூர்வாசிகள் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் பெண் ஒருவர் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.