இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

இண்டிகோ விமானங்களின் குளறுபடி படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாக தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பெர்ஸ் தெரிவித்துள்ளார்.
இண்டிகோ, பீட்டர் எல்பெர்ஸ்
இண்டிகோ, பீட்டர் எல்பெர்ஸ் படம் - பிடிஐ
Updated on
1 min read

இண்டிகோ விமானங்களின் குளறுபடி படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பெர்ஸ் தெரிவித்துள்ளார்.

சேவையின் முக்கியப் பிரச்னைகளை சரி செய்ய இண்டிகோ இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ஊழியர்கள் இடைவிடாது பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் விமான சேவையில் முக்கிய பங்காற்றி வரும் இண்டிகோ, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்தடுத்து விமானங்களை ரத்து செய்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் அதிகமான விமானங்கள், சனிக்கிழமை 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச. 7) நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 650 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அமைப்புகளை மறுதொடக்கம் செய்ய வேண்டியுள்ளதால், சில விமானங்களை இன்றும் ரத்து செய்ய வேண்டியிருந்ததாக தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பெர்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது,

''ஞாயிற்றுக்கிழமை டிச., 7ஆம் தேதி பிற்பகல் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என் பின்னால் நீங்கள் பார்க்கலாம், எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் இடைவிடாது உழைத்துக்கொண்டிருக்கின்றனர். இண்டிகோவின் இயக்கம் விரைவில் சரி செய்யப்படும்.

பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவரும் செய்யும் மகத்தான பணியை நான் மனதார பாராட்டுகிறேன். இண்டிகோ அமைப்பை மறுதொடக்கம் செய்துள்ளோம். இது நேற்று பலன் கொடுத்தது. இதனால், வெள்ளிக்கிழமை 1,500 விமானங்களை இயக்க முடிந்தது. அதற்கு முந்தைய நாள் 700 விமானங்கள் இயக்கப்பட்டன'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

Summary

IndiGo crisis step by step we re getting back says CEO Pieter Elbers Apologises

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com