

புது தில்லி: நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு அவசரநிலையின் கீழ் இருந்தது என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மக்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், வந்தே மாதரம் பாடல், 100 ஆண்டுகளைக் கடந்தபோது, அரசியலமைப்புச் சட்டம் கழுத்து நெறிக்கப்பட்டு, அவசரநிலையால் நாடு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.
வந்தே மாதரம் 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு அவசரநிலையின் கீழ் இருந்ததைச் சுட்டிக்காட்டி மக்களவையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.
மக்களவையில் வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசி வரும் மோடி, வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, இந்தியா காலனித்துவத்தின் கீழ் தத்தளித்துக் கொண்டிருந்தது என்றார்.
அதாவது, "வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது, அதே நேரத்தில் அதன் 100 வது ஆண்டு விழாவின்போதோ, நாடு அவசரநிலையின் கீழ் சிக்கியிருந்தது" என்றார்.
அந்த நேரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. நாட்டின் விடுதலைக்காக வாழ்ந்தவர்களும் உயிரை இழந்தவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். நமது நாட்டின் வரலாற்றில், அவசரநிலை என்பது ஒரு இருண்டப் பக்கம்.
ஆனால் இன்றோ வந்தே மாதரத்தின் புகழை பறைசாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. வந்தே மாதரம் என்னும் மந்திரம், சுதந்திரப் போராட்டத்தின் போது அனைத்து வீரர்களுக்கும் சக்தியையும் உத்வேகத்தையும் அளித்தது என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க. ..சோதனை மேல் சோதனை...! இண்டிகோ விமானத்துக்குள் புறா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.