

நாட்டின் வணிகத் தலைநகராக விளங்கும் மும்பயில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்து இதுவரை 20 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி வரை பணத்தை இழந்துள்ளனர். இதுவரை மீட்கப்பட்டது சிறு தொகைதான்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் முதல், தொழில்முனைவோர் வரை பலரும் சைபர் குற்றவாளிகளுக்கு இலக்காகியிருக்கிறார்கள்.
வங்கிகளோ, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர்த்துவிட்டு, பொறுப்புத் துறப்பை மேற்கொள்கிறார்கள். இதனால், ஏராளமான பாதிக்கப்பட்ட மக்கள் சட்ட ரீதியாகவே போராட வேண்டியிருக்கிறது.
இதில், 4,132 முதல் தகவல் அறிக்கைகள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மோசடிகள். அதில், ஏடிஎம் மோசடி, சிம் ஸ்வாப், கார்டுகளை குளோனிங் செய்வது, ஓடிபி மோசடி போன்றவை அடங்கும். இதில் இழந்த தொகை ரூ.161.5 கோடி. மீட்கப்பட்டதோ வெறம் ரூ.4.8 கோடி.
மோசடியாளர்கள் பல பல வகைகளைக் கையாண்டு மோசடியில் ஈடுபடுகிறார்கள். சிசிடிவி இருக்கும் இடங்களில் உள்ள கடைகளில் கார்டுகளை ஸ்வைப் செய்யும்போது, அதில் பதிவாகும் அட்டை எண் மற்றும் பின் எண் ஆகியவற்றைக் கொண்டு கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகள் குளோனிங் செய்யப்பட்டு பணம் திருடுவதும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பல மோசடிகள் குறித்து வங்கிகளிடம் புகார் அளிக்கப்பட்டாலும், அந்தப் பணப்பரிமாற்றங்களை வங்கிகள் ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
மோசடி நடந்து மூன்று நாள்களுக்குப் பின் புகார் அளித்தால் அந்த மோசடியில் வங்கிகள் எந்த பொறுப்பையும் ஏற்பதில்லை.
எனவே, இதுபோன்ற மோசடிகளின்போது, வங்கிகள், பணப்பரிமாற்றத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.