

ஹைதராபாத் வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வெவ்வேறு நகரங்களிலிருந்து வந்த மூன்று விமானங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாகவும் அவற்றில் இரண்டு சர்வதேச விமானங்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக தரையிறங்கின என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதில், இரண்டு சர்வதேச விமானங்கள் திங்கள்கிழமை அதிகாலை ஹைதராபாத் வந்தடைந்தன. தொடர்ந்து, மூன்று விமானங்களுக்கும் நிலையான பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.
கடந்த வாரம் இதேபோன்று துபை - ஹைதராபாத் எமிரேட்ஸ் விமானத்திற்கும், இண்டிகோவின் மதீனா-ஹைதராபாத் மற்றும் ஷார்ஜா - ஹைதராபாத் விமானங்களுக்கும் தனித்தனியாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வழியாக வந்தன. இதனால் மதீனா-ஹைதராபாத் விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.