

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு, 3 ஆவது நாளாக இன்றும் (டிச. 10) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர் நீதிமன்ற வளாகத்தில் 2 கட்டங்களாகச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நீதிமன்றக் கட்டடம், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சோதனகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததால், இந்த மிரட்டல் போலியானது என காவல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதனால், மீண்டும் நீதிமன்றப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு கடந்த 6 வாரங்களில் 5 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், அஜ்மீர் தர்கா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களும் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: அதிகரிக்கும் விவாகரத்து! இனி திருமணங்கள் இல்லை: பெங்களூர் கோயில் அதிரடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.