

ஸ்டார்லிங்க் இணைய சேவை மூலம் இந்தியாவுக்கு சேவையாற்ற விரும்புவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையைக் கொண்டு வருவதில் அதன் நிறுவனர் எலான் மஸ்க் தீவிரமாக உள்ள நிலையில், விரைவில் ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை குறித்து அந்நிறுவன அதிகாரியை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று வடகிழக்கு பிராந்தியத்தின் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா பதிவிட்டார்.
இந்த நிலையில், ஜோதிராதித்யாவின் எக்ஸ் பதிவை பகிர்ந்த எலான் மஸ்க், `ஸ்டார்லிங்க் மூலம் இந்தியாவுக்கு சேவையாற்றுவதற்கு ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கான மாதாந்திரக் கட்டணமாக ரூ. 8,600 மற்றும் ஒருமுறை நிறுவுதல் கட்டணமாக ரூ. 34,000 என்று இணையங்களில் தகவல் வெளியான நிலையில், அதனை ஸ்டார்லிங்க் நிறுவனம் மறுத்தது. மேலும், கட்டண விவரங்கள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இதையும் படிக்க: அழகான முகம், துப்பாக்கியைப் போல உதடுகள்! அலுவலகப் பெண்ணை வர்ணித்த டிரம்ப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.