

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் ஆட்சியில் பொருளாதார வெற்றி குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ``இன்று நாங்கள் எங்கள் சூப்பர் ஸ்டார் கரோலினையும் உடன் அழைத்து வந்துள்ளோம். அவர் பெரியவர் அல்ல; இருந்தாலும் அவர் சிறந்தவர்.
அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, முழுவதுமாக அவரே ஆதிக்கம் செய்கிறார். அந்த அழகான முகத்துடனும், ஓர் இயந்திரத் துப்பாக்கியைப் போல நிறுத்தப்படாத உதடுகளுடனும் வருகிறார்.
எங்களிடம் சரியான கொள்கை இருப்பதாலேயே அவருக்கு அச்சம் என்பதேயில்லை’’ என்று தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதத்தில், எகிப்து நாட்டில் நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியையும் டிரம்ப் வர்ணித்துப் பேசியிருந்தார்.
மாநாட்டில் டிரம்ப் பேசும்போது, மெலோனியை அழகி என்று குறிப்பிட்டதோடு, அவ்வாறு கூறியது, உங்களை புண்படுத்தியதா என்றும் கேட்டார்.
``எங்களுடன் ஒரு பெண் இருக்கிறார், மிக இளமையான பெண் அவர், ஆனால், நான் அவ்வாறு கூற அனுமதியில்லை, காரணம், அவ்வாறு கூறுவதால், அது உங்களுடைய அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றார் டிரம்ப். மேலும், ஒருவேளை, அமெரிக்காவில், ஒருவரைப் பார்த்து இவ்வாறு கூறினால், அது அவர்களுடைய அரசியல் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த நிலையில்தான், கரோலினை டிரம்ப் வர்ணித்துப் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: உக்ரைனில் 3 மாதங்களுக்குள் தேர்தல்? - ஸெலென்ஸ்கி சூசகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.