

பிரதமர் மோடி தனது வேலை நாள்களில் பாதியை வெளிநாட்டில்தான் செலவிடுகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு பாஜகவினர் அவரை விமர்சித்து வரும் நிலையில் பிரியங்கா காந்தி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய காங்கிரஸின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களைச் சந்திக்கும் பொருட்டும் வருகிற டிச. 15 ஆம் தேதி ஜெர்மனிக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
குளிர்காலக் கூட்டத்தொடருக்கு மத்தியில் ராகுல் காந்தி ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்வதாக அவரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் வெளிநாடுகளுக்குச் செல்கிறார் என்றும் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பாஜகவினர் ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதற்கு பதில் அளிக்கையில்,
"பிரதமர் மோடி தனது வேலை நாள்களில் பாதியை வெளிநாட்டில்தான் செலவிடுகிறார்.
மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை எல்லாம் விட்டுவிடுகிறீர்கள்... எதிர்க்கட்சித் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.