

நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்திவிட்டு, தங்கள் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதாக பாஜக எம்.பி., கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.
மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதம் இன்று (டிச., 10) நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சுக்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் பேசினார்.
ஆனால், அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் கங்கனா பேசியதாவது,
''நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்துகின்றனர். ஆனால், அரசு பதில் அளிக்கவில்லை எனக் கூறுகின்றனர். மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்கும்போது கருத்துகளைக் கேட்காமல், அவையில் இருந்து வெளியேருகின்றனர்.
வாக்குத் திருட்டில் ஈடுபடும் ஊடுருவல்காரர்களுக்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறு செயல்படுகின்றனர். அவர்கள் அனைவரின் நேரத்தையும் வீணாக்குகின்றனர். இவை அனைத்துக்கும் அவர்கள் (காங்கிரஸ்) பதில் அளிக்க வேண்டியவர்கள்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் கேள்விகளுக்கு அமித் ஷாவிடம் பதில் இல்லை: ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.