

5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில்ம், கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வரதன், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 9 லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்துள்ளதாகவும், வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட தரவுகளில், கடந்த 2020 ஆம் ஆண்டு 85,256 இந்தியர்களும், 2021 - 1,63,370 இந்தியர்களும், 2022 - 2,25,620 இந்தியர்களும், 2023 - 2,16,219 இந்தியர்களும், இறுதியாக 2024 ஆம் ஆண்டில் 2,06,378 இந்தியர்களும் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
இந்த நிலையில், குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் தரவுகள் அனைத்தையும் மத்திய அரசு முறையாக ஆவணப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மட்டும் 11,89,194 இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
இதேபோல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அளித்த புகார்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு, 2024 ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் 16,127 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 பயணக் கூப்பன்! - இண்டிகோ அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.