பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 பயணக் கூப்பன்! - இண்டிகோ அறிவிப்பு

விமான சேவையால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு...
IndiGo Rs 10,000 Travel Vouchers For Severely Impacted Customers
விமான சேவையால் பாதிக்கப்பட்ட பயணிகள்...
Updated on
1 min read

இண்டிகோ விமான ரத்து மற்றும் தாமதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள பயணக் கூப்பன் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானிகளுக்கு அதிக ஓய்வு கொடுக்கும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, விமானிகள் பற்றாக்குறையால் தொடர்ந்து இன்று 10 ஆவது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும் இண்டிகோ நிறுவனத்திற்கு போதிய அறிவுறுத்தல்களையும் கட்டுப்பாடுகளையும் வழங்கியுள்ளதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இண்டிகோவில் 5% விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான சேவை பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை விமான தாமதம் அல்லது விமானம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள பயணக் கூப்பன்(travel voucher) வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே டிஜிசிஏ விதிமுறைகளின் கீழ் விமான ரத்து காரணமாக பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டிய தொகையுடன் இந்த பயணக் கூப்பனும் சேர்த்து வழங்கப்படும்.

இந்த ரூ. 10,000 மதிப்புள்ள பயணக் கூப்பனை அடுத்த 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

டிச. 3, 4, 5 தேதிகளில் விமானங்கள் ரத்து மற்றும் தாமதத்தால் பயணிகள், பல மணி நேரம் விமான நிலையங்களில் கடும் அவதிக்குள்ளானதை ஒப்புக்கொண்டுள்ள இண்டிகோ நிறுவனம், விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள்ளாக ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு அந்த பயணிகளின் பயண நேரத்தைப் பொருத்து ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை இழப்பீடு வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.

Summary

IndiGo Rs 10,000 Travel Vouchers For Severely Impacted Customers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com