

புகழ்பெற்ற தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று (டிச. 11) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மரியாதைச் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண், கவிஞர் சுப்ரமணிய பாரதியாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டுமென அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தமிழ்நாட்டின் சென்னையில் வளர்ந்த ஒருவராக பாரதியாரின் வாழ்க்கையில் இருந்து மூன்று முக்கிய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.
1) தாய்நாட்டிற்கான அர்ப்பணிப்பில் அச்சமின்மை 2) தாய்மொழியின் மீதான அன்பு 3) பன்மொழித் திறமை மற்றும் பிற மொழிகளின் மீதான மரியாதை. அவர் (பாரதியார்) உண்மையாகவே பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவர்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரரான மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவுக்கான வளா்ச்சிப் பாதையை நாமே வகுக்க வேண்டும்: கௌதம் அதானி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.