

2008 ஆம் ஆண்டு கலவரம் தொடர்பான வழக்கில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே தாணே மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2008ஆ ஆண்டு வட இந்தியர்களுக்கு எதிரான பேச்சு தொடர்பாக ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டதையடுத்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தைத் தூண்டிவிட்டதாக ராஜ் தாக்கரே மீதும் அவரது கட்சித் தொழிலாளர்கள் பலரின் மீதும் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 109 மற்றும் 117-ன் கீழ் ராஜ் தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தாணே மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராஜ் தாக்கரே நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டபோது ராஜ் தாக்கரே இல்லை என்று பதிலளித்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததாகவும், எம்.என்.எஸ் தலைவர் நீதிமன்றம் இயக்கும்போதெல்லாம் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வார் என்றும் ராஜ் தாக்கரேவின் வழக்குரைஞர் ராஜேந்திர ஷிரோட்கர் தெரிவித்தார்.
ராஜ் தாக்கரே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டமும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: லாக்டவுன் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.