

இந்தியாவுக்கு வருகைதரும் லியோனல் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 10 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு டிச. 13, 14, 15 ஆகிய தேதிகளில் வருகை தருகிறார். கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், தில்லி ஆகிய முக்கிய நகரங்களில் பொது நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்த நிலையில், ஹைதராபாதில் உள்ள ஃபலக்னுமா அரண்மனையில் மெஸ்ஸியை சந்தித்து, உரையாடி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால், அதற்கான கட்டணமாக ரூ. 9.95 லட்சம் மற்றும் ஜிஎஸ்டி வரி என மொத்தமாக ரூ. 10 லட்சமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மெஸ்ஸியுடன் புகைப்படம் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு முன்னேறிய மிட்செல் ஸ்டார்க்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.