

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது உச்சத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக தன் வாழ்நாளில் உச்சமான மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் இரண்டு ஆஷஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் 10, இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்து இரண்டிலும் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த அபாரமான பந்துவீச்சினால் ஐசிசி தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மீதமுள்ள 3 போட்டிகளிலும் இதேமாதிரி விளையாடினால் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை
1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 879 புள்ளிகள்
2. மாட் ஹென்றி - 853 புள்ளிகள்
3. மிட்செல் ஸ்டார்க் - 852 புள்ளிகள்
4. நோமன் அலி - 843 புள்ளிகள்
5. மார்கோ யான்சென் - 825 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.