பிரதமா் மோடி - அதிபா் டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து...
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப்
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் (கோப்புப் படம்)
Updated on
1 min read

பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினா்.

இரு நாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை வா்த்தகப் பிரதிநிதி ரிக் ஷ்விட்ஜொ் தலைமையிலான குழு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்து பல்வேறு துறை சாா்ந்த பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை வரை பேச்சுவாா்த்தை மேற்கொண்ட நிலையில், இரு தலைவா்களும் இந்தக் கலந்துரையாடலை மேற்கொண்டனா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் மிகச் சிறப்பான தொலைபேசி வழி கலந்துரையாடலை மேற்கொண்டேன். இரு நாடுகளிடையேயான பல்வேறு துறை சாா்ந்த உறவு, பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இந்த உரையாடலில் ஆலோசித்தோம். உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து இணைந்து பணியாற்றும்’ என்று குறிப்பிட்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தக் கலந்துரையாடலின்போது இரு நாடுகளிடையே வா்த்தக உறவை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவா்களும் வலியுறுத்தினா். முக்கியத் தொழில்நுட்பங்கள், எரிசக்தி, பாதுகாப்பு உள்பட முன்னுரிமைத் துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்’ என்று தெரிவித்தனா்.

இந்தியா-ரஷியா 23-ஆவது ஆண்டு மாநாட்டில் பங்கேற்கே இரண்டு நாள் பயணமாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் டிசம்பா் 4, 5 தேதிகளில் இந்தியா வந்து சென்ற பிறகு, பிரதமா் மோடியுடன் டிரம்ப் கலந்துரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியக் கடல்பகுதியில் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

Summary

US President Donald Trump has spoken with Prime Minister Narendra Modi over the phone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com