இந்தியக் கடல்பகுதியில் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

குஜராத்தில், இந்தியக் கடல்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...
இந்தியக் கடல்பகுதியில் மீன்பிடித்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது...
இந்தியக் கடல்பகுதியில் மீன்பிடித்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது...எக்ஸ்/ PRO Defence Gujarat
Updated on
1 min read

குஜராத்தில், இந்தியக் கடல்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்சு மாவட்டத்தில் ஜக்கோவ் கிராமத்தின் அருகில் இந்தியக் கடல்பகுதியில், நேற்று (டிச. 10) அனுமதியின்றி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவப் படகு ஒன்றை, கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் படகில் இருந்த 11 பாகிஸ்தான் மீனவர்களைக் கைது செய்த இந்திய அதிகாரிகள், அவர்களை ஜக்கோவ் துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

இத்துடன், அவர்களது படகையும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் சிறைப்பிடித்து சோதனைகள் மேற்கொண்டதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சில நாள்கள் முன்பு எல்லையைக் கடந்து மீன்பிடித்த இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் மீனவர்கள் மனிதநேயத்தின் அடிப்படையில் தாயகங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ம.பி.யில் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சரண்!

Summary

In Gujarat, 11 Pakistani fishermen who were illegally fishing in Indian territorial waters have been arrested by the Coast Guard.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com