

மத்தியப் பிரதேசத்தில், கூட்டாக ரூ.43 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 2 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
பாலாகாட் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ரோஹித் மற்றும் தீபக் ஆகிய இருவரும், இன்று (டிச. 11) கொர்கா பகுதியிலுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையினரின் முகாமில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் ரூ.29 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த தீபக் மற்றும் ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த ரோஹித் ஆகிய இருவரும் சரணடைந்துள்ளது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள நக்சல்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மாநில அரசின் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர பிரமாண்ட சிலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.