

அமிர்தசரஸில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மற்றும் அதன் கிராமப்புறங்களில் உள்ள பல பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் வந்திருக்கிறது.
மின்னஞ்சலைத் தொடர்ந்து அமிர்தசரஸ் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் பீதியடைந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல பள்ளிகளுக்கு விரைந்தனர்.
பின்னர் அனைத்துப் பள்ளிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சைபர் போலீஸார் மின்னஞ்சல் குறித்து கண்காணித்து வருகின்றனர் என்று அமிர்தசரஸ் ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
மேலும் போலீஸார் முழுமையாக விழிப்புடன் இருப்பதால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று அந்த மேலும் கூறினார்.
கடந்த காலங்களில், இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஒரு சில மாணவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். முன்னதாக, உள்ளூர் டிஏவி பொதுப் பள்ளி மாணவர் ஒருவர் தனது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.
பிறகு மாணவரும் அவரது பெற்றோரும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதையடுத்து விடுவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.