

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 12) சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 2,560 உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை இன்று காலை வரலாறு காணாத வகையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000-க்கும் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கம் விலை இரண்டாவது முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.98,960-க்கும், கிராமுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 12,370-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், தொழிற்சாலை பயன்பாட்டில் வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதன்படி, வெள்ளி விலை இன்று இரண்டாவது முறையாக, கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.216-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ.2.16 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.