

சத்தீஸ்கரில் ரூ.33 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 10 நக்சல்கள் சரணடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆறு பெண்கள் உள்பட பத்து நக்சலைட்டுகள் சரணடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதன் மூலம், இந்த ஆண்டு மாவட்டத்தில் மொத்தம் 263 மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டுள்ளனர் என்று காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் தெரிவித்தார்.
இவர்கள் அனைவருக்கும் கூட்டாக ரூ.33 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதில், மாவோயிஸ்டுகளின் படைப்பிரிவு தளபதியான மிடியம் பீமாவுக்கு(30) மட்டும் ரூ.8 லட்சம் அடங்கும்.
மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்த அவர்கள் ஏகே-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.
காவல் துறை தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தீஸ்கரில் சுமார் 2,400 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். கடந்த 11 மாதங்களில் பஸ்தார் பகுதியில் 1,514 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டதாக காவல் துறைத் தலைவர் (பஸ்தார் பகுதி) சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.