தில்லிக்குப் படையெடுத்த காங். தலைவர்கள்: வாக்குத் திருட்டுக்கு எதிராக நாளை போராட்டம்!

தில்லி ராம்லீலா திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போராட்டம் பற்றி...
காங்கிரஸ் போராட்டம் நடைபெறவுள்ள ராம்லீலா திடல் அலங்கரிக்கப்படும் காட்சி
காங்கிரஸ் போராட்டம் நடைபெறவுள்ள ராம்லீலா திடல் அலங்கரிக்கப்படும் காட்சி PTI
Updated on
1 min read

புது தில்லி: வாக்குத் திருட்டுக்கு எதிராக நாளை(டிச. 14) காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடுவதையடுத்து, இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் தலைநகரைச் சென்றடைந்தனர்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கையிலெடுத்துள்ள ‘வாக்குத் திருட்டு’ விவகாரம் தேசிய அளவில் பூதகரமாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், தில்லி ராம்லீலா திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க தமது ஆதரவாளர்களுடன் சென்றுள்ள கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் பேசும்போது, “வாக்காளர்களின் உரிமைகளை நீங்கள் பறித்துச் செல்ல முடியாது என்ற செய்தியை நாட்டுக்கு அனுப்புவதற்காகவே இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருக்கிறோம். ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்கவே நாங்கள் அனைவரும் போராடுகிறோம்” என்றார்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் பேசும்போது, “தீர்க்கமான போராட்டத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி ஒரு அடியையெடுத்து வைத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்பார்கள்” என்றார்.

இதனிடையே, காங்கிரஸின் போராட்டத்தை விமர்சித்துள்ள அஸ்ஸாம் முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசும்போது, “ராகுல் காந்திக்கு மதிப்பேயில்லை. இன்று அவர் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்; அதனைத்தொடர்ந்து, ஏதேனுமொரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வார். கிறிஸ்துமஸ், புத்தாண்டை எங்கே கொண்டாடப் போகிறார்? என்பது தெரியவில்லை” என்றார்.

Summary

Congress to hold Vote Chor, Gaddi Chhod rally at Ramlila Maidan tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com