

ராஞ்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு நிலவியது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இண்டிகோ விமானத்தின் வால் பகுதி மோதியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் புவனேஸ்வர்-ராஞ்சி விமானம் சுமார் 70 பயணிகளுடன் தரையிறங்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து ராஞ்சி விமான நிலைய இயக்குநர் வினோத் குமார் கூறுகையில், தரையிறங்கும் போது விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையைத் தொட்டது. அந்த சமயத்தில் பயணிகள் திடீர் அதிர்வை உணர்ந்தனர். இருப்பினும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருந்தனர்.
ராஞ்சியிலிருந்து புவனேஸ்வருக்குச் செல்லும் விமானத்தின் அடுத்த புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. சில பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். மேலும் சிலர் தங்கள் பயணத்தை மாற்றியமைத்தனர். இன்னும் சில பயணிகள் சாலை வழியாக புவனேஸ்வருக்கு அனுப்பப்பட்டனர் என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தின் அடுத்த புறப்பாட்டு ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.