

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நன்றி தெரிவித்து, ”உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு நன்றி. இது ஒரு ஆணித்தரமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஆணை.
தேர்தல் முடிவுகள், யுடிஎஃப் மீது மக்களுக்கு வளர்ந்து வரும் நம்பிக்கையின் அறிகுறி. மேலும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி நோக்கிய பாதையைக் காட்டுகிறது.
கேரளம், வளர்ச்சி நடவடிக்கைகளைக் கவனித்து, பதிலளித்து, செயல்படுத்தும் பொறுப்புள்ள நிர்வாகத்தைத்தான் விரும்புகிறது.
கேரள மக்களுடன் நின்று, அவர்களின் கவலைகளை நீக்கி, வெளிப்படையான மற்றும் மக்களே முதல் என்ற நிர்வாகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் எங்களின் நிலைப்பாட்டை இனி எவராலும் மாற்ற முடியாது.
இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் தொண்டருக்கும் பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: கேரள உள்ளாட்சித் தேர்தல்: 4 மாநகராட்சிகளைக் கைப்பற்றும் காங்கிரஸ்! கம்யூ. - 1; என்டிஏ - 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.