

கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணியை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று(டிச. 13) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாலை 5 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி(எல்டிஎஃப்) கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கூட்டணியான யுடிஎஃப் முன்னிலையில் இருந்து வருகிறது.
மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 504 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டணி 341 இடங்களிலும் பாஜக கூட்டணி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் - 79, எல்டிஎஃப் - 63
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் - 7, எல்டிஎஃப் - 7
87 நகராட்சிகளில் யுடிஎஃப் - 54, எல்டிஎஃப் - 28, என்டிஏ - 1, மற்றவை - 1
6 மாநகராட்சிகளில் யுடிஎஃப் - 4 எல்டிஎஃப் - 1, என்டிஏ - 1 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. கோழிக்கோடு மாநகராட்சியை கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கையின் அறிகுறி என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளத்தில் அடுத்தாண்டு(சில மாதங்களில்) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.