

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தங்கியிருக்கும் அறை வாடகை குறித்து சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த 3 நாள்களில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் மெஸ்ஸி கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்த மெஸ்ஸி, ஹையாட் ரீஜென்சி ஹோட்டலுக்கு சென்றார்.
மெஸ்ஸியின் வருகையையொட்டி, ஹோட்டலில் ஏழாவது தளம் முழுவதும் அடைக்கப்பட்டு, உரிய பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெஸ்ஸி தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் வாடகை குறித்து சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஹையாட் ரீஜென்சியின் இணையதளத்தில், டிசம்பர் 13 ஆம் தேதிக்கான பதிவில் ஜனாதிபதி சூட் என்ற உயர்தர அறைத் தொகுப்பைப் பதிவுசெய்ய முடியவில்லை. இதன் மூலம், ஜனாதிபதி சூட்டில் தான் மெஸ்ஸி தங்கியிருப்பார் என்று யூகிக்க முடிகிறது.
இந்த அறைத் தொகுப்பில் சமையலறை, தனிப்பட்ட பணியிடம், தனிப்பட்ட சந்திப்புக்கான அறை, 8 இருக்கைகள் கொண்ட உணவறையுடன் ( Dining Area - டைனிங் ஏரியா) ஓர் இரவுக்கு சுமார் ரூ. 1,42,500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
டிப்ளோமேட்டிக் சூட் தொகுப்பு ஓர் இரவுக்கு ரூ. 1,12,500-க்கும், ரீஜென்சி எக்ஸிகியூட்டிவ் தொகுப்பு ரூ. 51,000-க்கும், ரீஜென்சி சூட் கிங் தொகுப்பு ரூ. 38,000-க்கும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இவற்றில் ஏதேனும் ஓர் அறையில்தான் மெஸ்ஸி தங்கியிருக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: மெஸ்ஸியைப் பார்க்க தேனிலவை ரத்து செய்த தம்பதியினர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.