

ஜெய்ப்பூரில் ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் தீர்ந்த நிலையில் பிறந்த ஒரு நாளேயான குழந்தைப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை பஸ்ஸி அருகே நிகழ்ந்தது. பிறந்து ஒருநாளேயான குழந்தை மூச்சுவிடச் சிரமப்பட்ட நிலையில், அந்தக் குழந்தை பாரத்பூர் மாவட்டத்தின் பயானா மருத்துவமனையிலிருந்து எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. குழந்தையின் தந்தையும், மாமாவும் தனியார் ஆம்புலன்ஸில் குழந்தையை அழைத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக பஸ்ஸி காவல் நிலைய ஆய்வாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.
குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் விநியோகம் தீர்ந்த நிலையில் ஓட்டுநர் அவர்களை பஸ்ஸி அரசு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றுள்ளதாகக் குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.
பான்ஸ்கோ அருகே, சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டதை தந்தை கவனித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருகிலுள்ள பஸ்ஸி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ஆம்புலன்ஸில் செவிலியர் பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தையின் தந்தையே இயக்கிக்கொண்டிருந்தார் என்று ஆய்வாளர் கூறினார்.
குழந்தையின் உடலுடன் தந்தை பரத்பூருக்குச் சென்றுவிட்டார். இது தொடர்பாக எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.