கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு!

கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை நடிகர் ஷாருக்கான் சந்தித்துள்ளது குறித்து...
கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான்
கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் படம் - எக்ஸ்/teamshahrukhkhan
Updated on
1 min read

கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.

‘கோட் டூர் ஆஃப் இந்தியா’ எனும் திட்டத்தின்படி அர்ஜெண்டீனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதன்படி, இன்று (டிச. 13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி காணொலி வாயிலாகத் இன்று திறந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், லேக் டவுன் திடலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது இளைய மகன் அப்ராம் ஆகியோர் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை நேரில் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில், அவர்கள் மூவரும் கைகுலுக்கி உரையாடியதோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த விடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருவரது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகின்றது.

முன்னதாக, கால்பந்து வீரர் மெஸ்ஸியின் வருகையை முன்னிட்டு கொல்கத்தா நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்தில் காட்சியளிக்கின்றது.

இதையடுத்து, ஹைதராபாத், மும்பை மற்றும் தில்லி ஆகிய நகரங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவேசம்!

Summary

In Kolkata, popular Bollywood actor Shah Rukh Khan met football legend Lionel Messi in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com