

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்திருக்கும் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, கோட் டூர் ஆஃப் இந்தியா 2025 என்ற பயண திட்டத்தின்படி, கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு இன்று (டிச. 13) காலை 11.15 மணியளவில் சென்றார்.
சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண தலா ரூ. 5,000 முதல் ரூ. 25,000 கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில், மைதானம் வந்தடைந்த மெஸ்ஸி, சிறிதுநேரத்திலேயே அங்கிருந்து சென்று விட்டதாகவும், அவரைச் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்றும் ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்.
இதனிடையே, மெஸ்ஸி காண இயலாத ரசிகர்கள் சிலர், தண்ணீர் பாட்டில்களை மைதானத்தை நோக்கி எறிவதும், நாற்காலிகளை வீசுவதும், அங்கு ஒட்டப்பட்டிருந்த பதாகைகளைக் கிழிப்பதும் என ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: மெஸ்ஸி இந்தியா வருகை! கொல்கத்தாவில் ஒருநாள் அறை வாடகை எவ்வளவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.