

உத்தரப் பிரதேசத்தில் கோயில்களில் இருந்து பித்தளை மணிகளைத் திருடிய 7 பேரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹரில் உள்ள கோயில்களில் இருந்து பித்தளை மணிகள் தொடர்ச்சியாக திருடுபோனதாக சமீபத்திய நாள்களில் புகார் எழுந்தது.
இதனைத் தடுக்க அதிகாரி திபாய் மேற்பார்வையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்த குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் வியாழக்கிழமை இரவு ஹம்மு மற்றும் தாஜ் முகமது ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சனிக்கிழமை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், 100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட மணிகளையும் சட்டவிரோத ஆயுதங்களையும் மீட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
கைதான ஏழு பேர் கொண்ட கும்பல் புலந்த்ஷாஹர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான அலிகார் மற்றும் ஹத்ராஸில் செயல்பட்டு வந்ததாகவும், ஹத்ராஸ் மற்றும் அலிகார் மாவட்டங்களின் அருகே உள்ள கோயில்களிலும் இதேபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் போலீஸார் கூறினர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கைகள் திபாய் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர்(கிராமப்புற) தேஜ்வீர் சிங் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.