தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அரசின் அதிரடி உத்தரவு!

தில்லியில் லாரி போக்குவரத்து, கட்டுமானப் பணி, கட்டட இடிப்புப் பணிகளுக்குத் தடை
தில்லி காற்று மாசு
தில்லி காற்று மாசுPTI
Updated on
1 min read

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் நான்காம் கட்ட செயல்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

தில்லியில் காற்றின் தரம் நாளுக்குநாள் மோசமடைந்து வரும்நிலையில், இன்று (டிச. 14) காலையில் காற்றின் தரக் குறியீடு 459 என்ற மோசமான நிலையை எட்டியது.

இதனைத் தொடர்ந்து, காற்று மாசைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டமான நான்காம் கட்டத்தின்படி, மாநிலத்தில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் லாரிகளைத் தவிர, அனைத்து நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தவும், போக்குவரத்து சிக்னல்களில், சிவப்பு விளக்கின்போது வாகனங்களை அணைக்குமாறும் அரசு வலியுறுத்தியுள்ளது.

நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைய வழியிலான வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாள்களில் மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மூன்றாம் கட்ட செயல்திட்டத்தின்போது நெடுஞ்சாலை, சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கும், கட்டட இடிப்புப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

Summary

Air quality worsens in Delhi, AQI settles in severe zone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com