

ஜார்க்கண்டில் மேற்கு வங்க தொழிலதிபரை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது கூட்டாளியை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ஜரியகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தில்மி பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. தகவல் கிடைத்ததும், பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
டோர்பா துணைப்பிரிவு காவல் அதிகாரி கிறிஸ்டோபர் கெர்கெட்டா கூறுகையில், பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டுள்ளோம். மேலும் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆறு பேரை கைது செய்துள்ளோம்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் குந்தியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்களிடமிருந்து நான்கு சக்கர வாகனம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் ஐந்து மொபைல் போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஹரு முகர்ஜி (65) என அடையாளம் காணப்பட்ட தொழிலதிபர், செங்கல் சூளையில் வேலைக்கு தொழிலாளர்களை பணியமர்த்த தனது கூட்டாளி விஜய் ஓரான் (40) வீட்டிற்கு வந்தபோது கடத்தப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.