

கொல்கத்தாவி மெஸ்ஸி நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்ட வழக்கில் கைதான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவுக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் பிதான்நகர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சதத்ரு தத்தாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை 14 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அடுத்த 14 நாள்களில் போலீஸ் விசாரணையில் தெளிவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தத்தாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
தத்தாவை ஆஜர்படுத்த அழைத்து போது நீதிமன்றத்திற்கு வெளியே பாஜக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் 3 நாள்கள் இந்தியப் பயணமாக மெஸ்ஸி கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தா வந்தாா். இதையொட்டி, நகரின் சால்ட் லேக் மைதானத்தில் அவா் ரசிகா்களைச் சந்திக்கும் நிகழ்வு சனிக்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு ரூ. 4,500 முதல் ரூ.10,000 வரை கொடுத்து டிக்கெட் வாங்கிய ஏராளமான ரசிகா்கள் மைதானத்தில் திரண்டிருந்தனா். மெஸ்ஸி தனது ஆா்ஜென்டீனா அணியின் மற்ற வீரா்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோருடன் மைதானத்துக்கு வந்தாா். அவா் ஆடுகளத்தில் சிறிது தூரம் நடந்து, மைதானத்தைச் சுற்றி பாா்வையாளா் அரங்கில் நிறைந்திருந்த ரசிகா்களைப் பாா்த்துக் கையசைத்தாா்.
ஆனால் மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டுச் சென்றதால், அவரை சரியாகப் பாா்க்காத ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்த பொருள்களை ரசிகா்கள் அடித்து நொறுக்கி சூறையாடினா். வன்முறையில் ஈடுபட்ட ரசிகா்களை போலீஸாா் தடியடி நடத்திக் கலைத்தனா். நிகழ்ச்சி நிா்வாக குளறுபடிக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் கைது செய்யப்பட்டாா்.
மேலும், இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உத்தரவிட்டுள்ளதுடன், ரசிகா்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.