

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தற்போது மும்பைக்குச் சென்றுள்ளார்.
’கோட் டூர் ஆஃப் இந்தியா 2025’ என்ற பயண திட்டத்தின்படி மெஸ்ஸி நேற்று (டிச.13) அதிகாலை கொல்கத்தாவுக்கு வந்தார்.
கொந்தளித்த கொல்கத்தா, அமைதியான ஹைதராபாத்
கொல்கத்தாவில் தனது சிலையை திறந்த பிறகு சால்ட் லேக் திடலுக்குச் சென்ற அவர் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து 10 நிமிஷங்களில் வெளியேறினார்.
இதனால் ரசிகர்கள் ஆவேஷமடைந்து திடலை அடித்து நொறுக்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். டிக்கெட் எடுத்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படுமெனக் கூறப்பட்டது.
அடுத்ததாக, மெஸ்ஸி மாலை 7 மணி அளவில் ஹைதராபாத் சென்றார். அங்கு ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து விளையாடினார்.
இங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். ரசிகர்களுக்கும் கை அசைத்து மகிழ்ந்தார். இங்கு எந்தப் பிரச்னையும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மும்பைக்குச் சென்றுள்ள மெஸ்ஸி, மாலை 5 மணிக்கு வான்கடே திடலுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. அவருடன் ரோட்ரிகோ டி பால், லூயிஸ் சௌரஸ் வருகிறார்கள்.
மும்பை நிகழ்ச்சி நிரல் அப்டேட்
5:50 PM - ஆட்டம் தொடக்கம்
6:05 PM - மகாராஷ்டிர முதல்வர் வருகை
6:07 PM - மெஸ்ஸியின் வருகை
6:08 PM - சௌரஸ், டி பால் வருகை.
6:11 PM- மெஸ்ஸி - முதல்வரும் விளையாடுதல்
6:12 PM -பெனால்டி ஷூட் அவுட்
6:15 PM - குழு புகைப்படம்
6:30 PM - மெஸ்ஸியின் பெனால்டி ஷூட் அவுட்
6:32 PM - சுனில் சேத்ரி, சச்சினை சந்திக்கும் மெஸ்ஸி
8:38 PM - ரசிகர்களுக்கு கை அசைத்தல்
8:51 PM - மெஸ்ஸி புகைப்படம் எடுத்தல்
8:53 PM- கோட் கோப்பையை அறிமுகம் செய்யும் மெஸ்ஸி
8:58 PM - முதல்வர் பேச்சு
9:10 PM - நிகழ்ச்சி முழுமையாக முடிவுறுதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.