

ராஜஸ்தானில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் மூச்சுத் திணறி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், குழந்தையை ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குழந்தையின் பெற்றோரை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு குழந்தையின் தந்தை அழைத்துச் சென்றார். ஆம்புலன்ஸில் செவிலியர்கள் யாரும் உடன்செல்லாத நிலையில், செல்லும் வழியிலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் தீர்ந்து, குழந்தை மயக்கமான நிலையில், பஹ்சி நகரில் உள்ள ஓர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலைமறைவாகி விட்டார்.
ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததாலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாகக் குழந்தையின் தந்தை குற்றம் சாட்டிய போதிலும், சம்பவம் தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.