

இன்று வாக்குத் திருட்டு மூலம் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
வாக்குத் திருட்டு விவகாரத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஆர்ப்பாட்டம் ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ``நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால், எங்களின் கேள்விகளுக்கு அவர்கள் (அமித் ஷா) பதிலளிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களைத்தான் அவர்கள் வழங்கினர். எப்படியெல்லாம் வாக்குகள் திருடப்பட்டன என்பதை ஆதாரங்களுடன் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிரம், ஹரியாணாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள், வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்துள்ளனர்.
இன்று ஆட்சியில் இருப்பவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை மக்களுக்கு சொல்ல விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.