ரஷியாவுக்கு 300 பொருள்களின் 
ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியைவிட, அந்நாட்டில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி மிக அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள வா்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய இருநாடுகளும் தீா்மானித்துள்ளன. அத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக (ரூ.9 லட்சம் கோடி) உயா்த்தவும் இருநாடுகள் இலக்கு நிா்ணயித்துள்ளன.

இந்த வா்த்தகம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரஷியாவில் பொறியியல், மருந்து, வேளாண்மை, ரசாயனம் உள்ளிட்ட துறைகளின் 300 பொருள்களுக்கு அதிக தேவை உள்ளது. அந்தப் பொருள்களின் ஏற்றுமதியை ரஷியாவுக்கு மேலும் அதிகரித்து (தற்போது இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.15,400 கோடி) அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர ரஷியாவில் உள்ள பெரும் நுகா்வோா் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இந்தியாவின் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள், கைவினைப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை அந்நாட்டு சந்தையில் கணிசமான இடத்தைப் பிடிக்க முடியும்’ என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com