சபரிமலையில் 25 லட்சம் பேர் சுவாமி தரிசனம்! மாற்றி யோசித்த பக்தர்கள்! ஆனால்

சபரிமலையில் 25 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். வார நாள்களில் கூட்டம் அதிகரிப்பு.
சபரிமலை
சபரிமலை
Updated on
1 min read

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் சபரிமலையில் நடந்து வரும் மண்டல பூஜையில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள் என்று கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

பொதுவாக வார இறுதி நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வார நாள்களிலேயே சபரிமலைக்குச் சென்றதால், வார நாள்களில் கூட்டம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாற்றி யோசித்ததில் தவறில்லை. ஆனால் எல்லோருமே மாற்றி யோசித்ததால்தான் தவறாகிவிட்டது.

கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்து. ஆனால், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த ஆண்டு சபரிமலை தேவஸ்தானம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து, பக்தர்கள் விரைவாகவும் அமைதியாகவும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தது.

கடந்த ஆண்டு, இதே மண்டல பூஜையில், இதேக் காலக்கட்டத்தில் சுவாமி தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 25 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கோயில் நிர்வாகி கூறினார்.

மண்டல பூஜை ஆரம்ப நாள்களில் கடுமையான கூட்டம் நிலவியது, பிறகு படிப்படியாக கூட்டம் குறைந்து, பல்வேறு முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவுகள் செய்து வந்ததால் திட்டமிட்டபடி சுவாமி தரிசனம் செய்து செல்ல வழிவகை ஏற்பட்டதாக்வும் கூறப்படுகிறது.

பக்தர்கள் முன்கூட்டியே தேதிகளை முன்பதிவு செய்துகொண்டு, தரிசனத்துக்கு வரும்போது, அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், வார இறுதி நாள்களில் கூட்டம் குறைவாகவும், இந்த ஆண்டு மட்டும் வாரநாள்களில் கூட்டம் அலைமோதுவதையும் பார்க்க முடிவதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், டிசம்பர் மாத இறுதியில் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

The pilgrim turnout at Sabarimala Lord Ayyappa Temple here has crossed 25 lakh in the ongoing annual Mandalam pilgrimage season, a senior official said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com