

வெளிநாடுகளில் போலியான கம்பெனிகளைத் தொடங்கி, இந்தியாவில் சைபர் மோசடி செய்து ரூ.1000 கோடி அளவுக்கு மக்களின் பணத்தை ஏமாற்றிய கும்பலை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
இந்த வழக்கில், சீனாவைச் சேர்ந்த 4 பேர் உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுளள்து. சைபர் மோசடிகளை செய்ய 58 கம்பெனிகள் செயல்பட்டு வந்துள்ளது. இவற்றின் மூலம், மக்களை ஏமாற்றிய ரூ.1000 வரையிலான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், வெளிநாடுகளிலிருந்து செயல்படும் சைபர் மோசடி கும்பல் பற்றி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி சிபிஐ மிகப்பெரிய கும்பலை கண்டுபிடித்துள்ளது.
மக்களை, போலியான கடன் விண்ணப்பம், முதலீட்டு திட்டங்கள், பொன்ஸி மற்றும் பல அடுக்கு சந்தை மோசடி, பகுதிநேர வேலை, ஆன்லைக் கேமிங் என பல வகைகளில் ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.
111 ஷெல் கம்பெனிகள் மூலம், ரூ.1,000 கோடி வரை இந்த மோசடி கும்பல் பரிமாற்றம் செய்திருப்பதாகவும், ஒரே ஒரு வங்கிக் கணக்குக்கு மட்டும் ரூ.152 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷெல் கம்பெனிகள் என்பது, இல்லாத ஒருவர் பெயரில் இயங்கும், போலியான ஆவணங்களை வைத்திருக்கும். அந்த கம்பெனிகளின் முகவரிகளும் பொய்யானவையாக இருக்கும். ஆனால், ஒரு கம்பெனி இயங்குவது போல பல நடவடிக்கள் பதிவாகும். ஆனால், அப்படி ஒரு கம்பெனி இருக்காது.
இந்த ஷெல் கம்பெனிகள் மூலம் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு, பல்வேறு பணப்பரிமாற்ற வழிகளும் உருவாக்கப்படும். இந்த கம்பெனிகள் பெயரில் மோசடிகள் செய்யப்பட்டு பணம் இந்த கம்பெனி வங்கிக் கணக்குக்கு வந்து பிறகு, மோசடியாளர்கள் கைக்கு மாறும் என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஷெல் கம்பெனிகள், சீனாவைச் சேர்ந்த நான்கு பேரால் ஒட்டுமொத்தமாக இயக்கப்பட்டு வந்துள்ளது. அவர்களின் இந்திய கூட்டாளிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களிடமிருந்து அடையாள ஆவணங்களைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கி, மோசடிகள் செய்து, அதிலிருந்து வரும் பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
விசாரணையில் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கு முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, வெளிநாட்டிலிருந்து இயங்கும் சைபர் மோசடி கும்பல் மற்றும் அதற்கு மூளையாக செயல்பட்ட சீனர்களும் அடையாளம்
இதையும் படிக்க.. தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.