

பிகாரில் தந்தை, அவரது 3 மகள்கள் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள நவல்பூர் மிஷ்ராலியா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்து 4 சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர். பலியானவர்கள் அமர்நாத் ராம் மற்றும் அவரது மூன்று மகள்கள், ராதா குமாரி, ராதிகா மற்றும் ஷிவானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உள்ளூர்வாசிகளின் கூறுகையில், சிறுமிகள் 9-12 வயதுடையவர்கள். அமர்நாத் ராம் தனது மூன்று மகள்களையும் தூக்கிலிட்டு பின்னர் தானும் அந்த முடிவை எடுத்துள்ளதாக கிராம மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இருப்பினும், ராமின் இரண்டு மகன்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். அவர்கள்தான் சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு கூறினர்.
இந்த சம்பவத்தை உள்ளூர்வாசிகள் ஒரு கூட்டு தற்கொலை என்று கூறினர். ராம் மிகுந்த நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், அவரது மனைவி இறந்த பிறகு குடும்ப விவகாரங்களை முறையாகக் கையாள முடியவில்லை என்றும் போலீசாருக்குத் தெரிவித்தனர். உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கிழக்கு-2 துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சம்பவத்திற்கான சரியான காரணம் உடற்கூராய்வுக்குப் பிறகுதான் தெரியவரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.