

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய பெண் ஓநாயை வனத் துறை ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றது.
இதுகுறித்து வன அதிகாரி ராம் சிங் யாதவ் கூறுஐகயில், கோடஹியா எண்.4 கிராமத்தின் ஜருவா குடியிருப்புப் பகுதியில் ஓநாய் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
வனத் துறை மீட்புக் குழு டிரோன்களுடன் கிராமத்துக்கு சென்றது.
இரண்டு டிரோன் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு டிரோன் ஆற்றுப்பகுதியை நோக்கி நிறுத்தப்பட்டிருந்தது.
அங்கு உயரமான புல்களில் ஓநாய் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது மீட்புக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தி ஓநாயை கொன்றது.
கொல்லப்பட்ட ஓநாய் சுமார் நான்கு முதல் ஐந்து வயதுடைய பெண் ஓநாய். சனிக்கிழமை பிற்பகலில், அதே கிராமத்தில் உள்ள ஆற்றங்கரைக்கு அருகே ஒரு ஆண் ஓநாய் சுட்டுக் கொல்லப்பட்டது.
கடந்த சில நாள்களாக அந்த ஓநாய் ஜோடி அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 7 வரை மல்கன்புர்வா கிராமத்தில் மூன்று ஓநாய் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.