

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் உள்ள சந்தௌசி கோட்வாலி பகுதியில் தலையற்ற உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து அங்குப் பதற்றம் நிலவி வருகின்றது.
போலீஸாரின் கூற்றுப்படி,
சந்தௌசி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பட்ரௌவா சாலையில் உள்ள பெரிய ஈத்காவுக்கு அருகில், தண்ணீருக்கு அருகே காலையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
வட்டார அதிகாரி (சந்தௌசி) மனோஜ் குமார் சிங் கூறுகையில்,
உடலின் இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் தலை ஆகியவை காணவில்லை.
உடல் பாகங்கள் விலங்குகளின் தாக்குதலால் சிதைக்கப்பட்டனவா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உடலின் அடையாளம் மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
உடலுக்கு அருகில் மிகவும் சிதைந்த நிலையில் ஒரு பையையும் போலீஸார் கண்டெடுத்தனர். அந்த உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
தலையற்ற உடலால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது. போலீஸார் இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Regarding the discovery of a headless body in Sambal...
இதையும் படிக்க: வா வாத்தியார் எப்போது ரிலீஸ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.