நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்பட வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்து சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
பின், டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்கள் நடைபெற்று வந்தன.
ஆனால், இப்படத்தை வெளியிடுவதற்கான தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்ததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இது கார்த்தி ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதுடன் ஞானவேல் ராஜாவை விமர்சித்தும் வந்தனர்.
இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்படத்தை வருகிற டிச. 24 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். ஒருவேளை, அந்த தேதியில் படம் வெளியாகவில்லை என்றால் ஓடிடி வெளியீட்டு ஒப்பந்தத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மேக்ஸை தொடர்ந்து மார்க்! வெற்றி எதிர்பார்ப்பில் கிச்சா சுதிப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.